Home Tamil Cinema News மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் கபாலி!

மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் கபாலி!

182

kabali_new_stills_0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம மலாய் மொழியில் டப் செய்யப்படுகிறது. இதன் மூலம் மலாய்யில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை கபாலி பெற்றிருகிறது.

ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிக்கும் கபாலி படத்தில் ரஜினி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

கபாலி படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என்று தெரிகிறது படக்குழு தெரிவித்துள்ளது.