Home Tamil Cinema News மலாய் மொழியில் டப் செய்யப்படும் ரஜினியின் கபாலி

மலாய் மொழியில் டப் செய்யப்படும் ரஜினியின் கபாலி

132

Rajini-Kabali

கபாலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரஜினி படங்கள் பெரும்பாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவரும்.

தற்போது முதன்முறையாக மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் படமும் டப் செய்யப்படாத மலாய் மொழியில் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் அவரது குரலுக்காக 200 பேர் வரை குரல் தேர்வு நடத்தியுள்ளனர். மலாய் மொழியில் உருவாகும் ‘கபாலி’ படத்துக்கான டீசர் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 15 நாட்களாக நடந்த இந்த குரல் தேர்வில் ரஜினியின் கபாலிடா என்ற வசனத்தை ரஜினியின் குரலுக்கு ஏற்றார்போல் பேசுவதற்கு பலரும் முயற்சி செய்தனர். கடைசியில், மலாய் மொழியில் ரஜினிக்கு குரல் கொடுக்க அருண் என்பவர் தேர்வாகியிருக்கிறார். அருண், சிறு வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியின் குரலுக்கு அருணின் குரல் கச்சிதமாக பொருந்தவே அவரை தேர்வு செய்துள்ளனர். இவர் மலாய் மொழியில் டப்பிங் பேசிய பிறகு, அதன் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here