கபாலி படத்தின் சென்சார் முடிந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது

கபாலி படத்தின் சென்சார் முடிந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது

54

 

kabali5

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்துக்கு திரைப்பட தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. படம் ஜூலை 22-இல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது என கூறப்படுகின்றது.

கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கபாலி திரைப் படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 32 நிமிஷங்கள்.

கபாலி திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சி பாரிஸ் நகரில் உள்ள “ரெக்ஸ் சினிமாஸ்’ அரங்கில் வரும் 21-ஆம் தேதியன்று திரையிடப்படுகிறது; ஐரோப்பாவின் மிகப் பெரிய அரங்கமான “ரெக்ஸ் சினிமாஸ்’-இல் ஒரே நேரத்தில் 2,800 பேர் அமர்ந்து திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கலாம் என்று யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை குழுவினர், ஆனால் இப்படத்தின் சென்சாரில் கிட்டத்தட்ட 10 காட்சிகள் வரை கட் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இயக்குனர் ரஞ்சித் எவ்வளவு போராடியும் அந்த காட்சிகளை நீக்கினால் தான் யு சான்றிதல், இல்லையேல் முடியாது என சென்சார் அதிகாரிகள் கூற, பிறகு கட் விழுந்த பிறகு தான் யு சான்றிதழ் கிடைத்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY