கபாலி வெளியீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாணு மனு

கபாலி வெளியீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாணு மனு

66

Kabali Movie Producer Thanu Files Petition in High Court

ரஜினி நடிப்பில்  கபாலி படம் வரும் 22-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதனை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

அடுத்தவாரம் இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த புகாரில் அவர், இணையத்தளங்களில் கபாலி படத்தின் முறைகேடான பதிவேற்றத்தைத் தடுக்கவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன அன்றே நல்ல தெளிவான காட்சிகளுடன் முழுப்படமும் இணையத்தில் வெளியாவது அதிகரித்து வருகிறது.

எனவே, அதை மனதில் வைத்தே முன்னெச்சரிக்கையாக தாணு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் உள்ள இது போன்ற 180க்கும் மேற்பட்ட இணையதளங்களையும் தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY