கபாலி பட ரிலீஸ் தேதி வெளியானது

கபாலி பட ரிலீஸ் தேதி வெளியானது

119

Kabali Movie Malaysia Country Release Date Announced

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் மலேசியாவில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இந்தப்படம் ஜுலை 29-ந் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளது.

மலேசியாவில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் மலேசியாவில் ‘கபாலி’ படம் ரிலீசாகும் தேதியை உறுதிபடுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கபாலி எந்த தேதியில் வெளியாகும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. மலேசியாவில் வெளியாகும் தேதியிலேயே இந்தியாவிலும் வெளியிடப்படுமா,

அல்லது மலேசியாவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்தும் தகவல் எதுவும் இல்லை. ஆயினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் கூடிய விரைவில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY