ரஜினியின் கபாலி பட பாடல்கள் வெளியீடு – ஒரு அலசல்

ரஜினியின் கபாலி பட பாடல்கள் வெளியீடு – ஒரு அலசல்

479

Kabali Movie Songs with Lyrics

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

கபாலி படத்தின் பாடல்கள் முதலில் இணையதளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சனிக்கிழமை (ஜூன் 11) பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாத இறுதியில் கபாலி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலி பட பாடல்கள் ஒரு பார்வை:

1)நெருப்புடா பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் தீயை பற்ற வைத்த தீம் சாங் தான்.

2)உலகம் ஒருவனுக்கா ரஜினிகாந்த் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான். அதிலும் இந்தப்பாடல் செம்ம மாஸ். இப்பாடல் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இருக்கிறது.

3)வானம் பார்த்தேன் ரஜினிகாந்த் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல், ப்ரதீப்பின் குரலில் ரசிகர்களை மெய் மறக்க வைக்கின்றது.

4)வீர துறந்துறா சந்தோஷ் நாரயணின் இசையில் பேவரட் ராப் சாங்காக உள்ளது, ப்ரதீப் குரலில் மெதுவாக ஆரம்பித்து லாரண்ஸின் குரலில் டெம்ப் ஏற்றி அசத்துகிறது.

5) மாய நதி சந்தோஷ் கிட்டாரில் கைதேர்ந்தவர் என்பதை இந்த மாய நதி பாடல் உணர்த்துகிறது, மிகவும் மெலடி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாடல் என்பது போல் தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY