Home Tamil Cinema News கோடிகளில் விற்பனையாகும் கபாலியின் வெளிநாட்டு உரிமை!

கோடிகளில் விற்பனையாகும் கபாலியின் வெளிநாட்டு உரிமை!

129

rajin

கபாலி படம் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இப்படத்தின் வெளிநாட்டின் உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக வெளியான செய்தி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் முகத்தில் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்தின் டீசர், டிரைலரை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.