Home Tamil Cinema News இணையதளத்தில் கபாலி பாடல் லீக் ஆனது – படக்குழுவினர் அதிர்ச்சி

இணையதளத்தில் கபாலி பாடல் லீக் ஆனது – படக்குழுவினர் அதிர்ச்சி

156

Kabali Movie Photos 28

ரஞ்சித் இயக்கி ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’. சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

மேலும் பாங்காக் சென்று படப்பிடிப்பை நடத்திய படக்குழுவினர் அடுத்ததாக கோவா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2 நிமிடங்களைக் கொண்ட இப்பாடல் வாட்ஸ் ஆப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனைக் கேள்விப்பட்ட கபாலி படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

மேலும் இதனால் படக்குழு மிகுந்த மன உளைச்சல் மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்துள்ளது. அதை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.