தீபாவளிக்கு தயாராகும் கபாலி பட்டாசுகள்

தீபாவளிக்கு தயாராகும் கபாலி பட்டாசுகள்

61

Kabali's Firework On Diwali Damakka

ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான கபாலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தில் ரஜினி பேசும் மகிழ்ச்சி மற்றும் பாடலில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ வார்த்தை உலகளவில் பிரபலமாகியுள்ளன.

சமூக வலைதளங்கள் தொடங்கி பொதுமக்கள் அதிகம் பேசக்கூடிய வார்த்தைகளாகவும் இவை மாறியுள்ளன. இந்த நிலையில் தீபாவளிக்குத் தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் கபாலி திரைப்படம் விட்டு வைக்கவில்லை. பட்டாசுகளுக்கு ‘நெருப்புடா’ என்றும் மத்தாப்புகளுக்கு ‘மகிழ்ச்சி’ என்றும் பெயர் வைத்து சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரித்து வருகிறார்களாம்.

இதனால் பட்டாசுகளின் விற்பனை கணிசமாக உயரும் என்பது பட்டாசு விற்பனையாளர்களின் எண்ணமாக உள்ளது. மறுபுறம் ரஜினி ரசிகர்களையும் இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY