Home Tamil Cinema News ஆசியவையே அதிர வைத்த கபாலி டீசர் ஹிட்ஸ்

ஆசியவையே அதிர வைத்த கபாலி டீசர் ஹிட்ஸ்

112

Kabali-Teaser

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இதில் ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளார். இந்த டீசர் வெளிவந்த ஒன்றரை மணி நேரத்தில் 10 லட்சம் ஹிட்ஸ், 1 லட்சம் லைக்ஸ் பெற்றது.

அதனை தொடர்ந்து ரசிகர்களின் ஆரவரத்தால் இந்த டீசர் 24 மணி நேரத்தில் 5 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது, 2.3 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.

மேலும், ஆசிய கண்டத்திலேயே ஒரு டீசருக்கு இத்தனை ஹிட்ஸ், லைக்ஸ் என்பது இதுவே முதன் முறையாகும். ரஜினிகாந்த் இதன்மூலம் அனைத்து சாதனைகளையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் தான் நம்பர் 1 என நிரூபித்து விட்டார்.