Home Tamil Movie Reviews காதலும் கடந்து போகும் – விமர்சனம்

காதலும் கடந்து போகும் – விமர்சனம்

259
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தமிழ் நாட்ல யார் தான் இன்ஜினியர் இல்லை, வாழ்க்கையே ஒரு டைம் பாஸ் தான், எதர்க்கும் வேலைக்கு போகனும், என பல வசனங்கள் அருமை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிகவும் யதார்த்தமாக சென்னையை காட்டியுள்ளது. சந்தோஷ் நாரயணன் பின்னணியில் கலக்கி விட்டார். பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போலவே உள்ளது.

3
இயக்கம்: நலன் குமாரசாமி
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாரயணன்
தயாரிப்பு: சினி குமார் மற்றும் ஞானவேல்ராஜா
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரகனி

இயக்குனர் நலன் குமாரசாமி தனது சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு My Dear Desperado என்ற கொரியன் படத்தை நம்ம ஊருக்கு கொண்டு வந்துள்ளார். இதில் தன் ஆஸ்தான நாயகன் விஜய் சேதுபதி, இவர் எப்படா தமிழ் சினிமாவிற்கு வருவார் என ஏங்கிய ரசிகர்களுக்காக செலினுடன் இந்த காதலும் கடந்து போகும் படத்தை இயக்கியுள்ளார்.

maxresdefault

விஜய் சேதுபதி தன் நண்பருக்காக ஜெயிலுக்கு சென்று வந்து ஒரு பார் ஓனராக வேண்டும் என தனது ஏரியாவில் பெரிய ரவுடி என்ற நினைப்பில் வலம் வருகிறார். விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஐடி வேலைக்காக பெற்றோர்கள் பேச்சை மீறி மடோனா வருகிறார்.

மடோனாவின் கம்பெனி சில நாட்களிலேயே இழுத்து மூட, வீட்டு வாடகை கட்ட முடியாமல் ஒரு லோக்கல் ஏரியாவில் குடியேறுகிறார். தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் விஜய் சேதுபதி இருக்க, இருவருக்கும் பல நேரங்களில் மோதல், சில நேரங்களில் காதல் என வாழ்கிறார்கள்.

இதையெல்லம் கடந்து விஜய் சேதுபதி பார் ஓனர் ஆனாரா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை தனக்கே உரிய டார்க் ஹியூமர் ட்ரண்டில் கூறியிருக்கிறார் இயக்குனர்.

maxresdefault (1)

விஜய் சேதுபதி தற்போது தான் நானும் ரவுடி தான், சேதுபதி என கொஞ்சம் தனது ட்ரண்டை மாற்றி களத்தில் இறங்கி கலக்க, இப்படம் மீண்டும் பழைய கேர்லஸ் கதாபாத்திரம் தான், நானும் ரவுடி தான் என ஊர் முழுவதும் அடி வாங்கி சுற்றி வருகிறார்.

படத்தின் உண்மையான ஹீரோ மடோனா தான். என்னமா நடிக்குது இந்த பொண்ணு என தன் களத்தில் புகுந்து விளையாடுகிறார். பல இயக்குனர்கள் கண்டிப்பாக அடுத்தடுத்து கமிட் செய்ய காத்திருப்பார்கள்.

படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் இன்றைய சமூகத்தின் வேலையில்லாதவர்கள் குறிப்பாக வேலை தேடும் பெண்கள் நிலையை உரித்து காட்டுகின்றது. இண்டர்வியூ செல்லும் இடத்தில் பாட சொல்வது, ஆட சொல்வது, பிறகு சொல்கிறோம் என அனுப்பிவிட்டு, ‘நல்லா டைம் பாஸ் சார்’ என ஊழியர்கள் அரட்டை அடிப்பது நெத்தியடி காட்சிகள்.

இதற்கும் மேலாக வேலைக்காக தன் ஆசைக்கு இனங்க சொல்வது என பெண்களின் அவலத்தை தெளிவாக காட்டியுள்ளார். இதற்கிடையில் பல இடங்களில் தன் ஸ்டைலிலேயே நலன் கிண்டல் கேலி என கலக்கியுள்ளார்.

kadhalum-kadanthu-pogum-movie-stills-talkiewoods-03

தமிழ் நாட்ல யார் தான் இன்ஜினியர் இல்லை, வாழ்க்கையே ஒரு டைம் பாஸ் தான், எதர்க்கும் வேலைக்கு போகனும், என பல வசனங்கள் அருமை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிகவும் யதார்த்தமாக சென்னையை காட்டியுள்ளது. சந்தோஷ் நாரயணன் பின்னணியில் கலக்கி விட்டார். பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போலவே உள்ளது.

மொத்தத்தில் காதலும் கடந்து போகும் – கடந்து போகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here