Home Tamil Cinema News பாடகி அவதாரம் எடுக்கிறார் நடிகை காஜல் அகர்வால்

பாடகி அவதாரம் எடுக்கிறார் நடிகை காஜல் அகர்வால்

137

kajal-agarwal

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திலும் பாடியதில்லை. ஆனால் தற்போது கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சக்கரவியூகா படத்தின் மூலம் பாடகி அவதாரம் எடுக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் 25 வது படமாக உருவாகி வரும் சக்கரவியூகா படத்தில் ஒரு டூயட் பாடலை பாடியிருக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கே லோகித்தும், காஜல் அகர்வாலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் லோகித்.

மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் பாடல் பதிவு நேற்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றிருக்கிறது. முதன்முதலாக பாடும் பாடல் என்பதால் இந்த வாய்ப்பை ஒரு திரில் தரும் அனுபவமாக காஜல் உணர்ந்திருக்கிறார்.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here