Home Tamil Cinema News கலாபவன் மணி விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன்லால்

கலாபவன் மணி விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன்லால்

178

mohanlal

கலாபவன் மணி மரணமடந்த நேரத்தில் அவருக்கு பல பிரபலங்கள் வருத்தம் தெரிவித்தனர், ஆனால் அதனை பற்றி மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் எந்தவித கருத்தும் தெரிவிக்காததால் சர்ச்சையில் சிக்கினார்.

இதன் காரணமாக திரையுலக ரசிகர்கள் மோகன்லாலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதன் பிறகே மவுனம் கலைத்தார் மோகன்லால். இந்த நிலையில் மணி விவகாரத்தில் அவர் மோகன்லால் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கலாபவன் மணியின் சொந்த ஊரான திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் மலையாள திரையுலகினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மணியை வைத்து 13 படங்கள் இயக்கிய இயக்குனர் வினயன் வரவில்லை. அவரை கூட்டத்திற்கு யாரும் அழைக்கவில்லையாம்.

மணியின் இரங்கல் கூட்டத்திற்கு வினயனை அழைக்கக் கூடாது என்று மோகன்லால் தான் கறாராக கூறியதாக இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா தெரிவித்துள்ளார்.

நான் கூறியதையும் மீறி யாராவது வினயனை கூட்டத்திற்கு அழைத்தால் நான் வர மாட்டேன் என்று மோகன்லால் தெரிவித்தார் என்று பைஜு கொட்டாரக்காரா கூறியுள்ளார். லாலின் பேச்சை மீற முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வினயனை அழைக்கவில்லை.

மேலும், மோகன்லால் போய் தனிப்பட்ட விரோதத்தை இப்படி பொது இடத்தில் காட்டுவதை பார்க்க வேதனையாக உள்ளது என்று பைஜு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here