Home Tamil Cinema News கோலமாவு கோகிலாவின் தங்கச்சி நான்தங்கோ!!

கோலமாவு கோகிலாவின் தங்கச்சி நான்தங்கோ!!

33

விஜய் டி.வியின் ‘கலக்கப்போவது யாரு?’ காமெடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஜாக்குலின். தற்போது, நயன்தாராவின் தங்கச்சியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்துவருகிறார்.நயன் உடன் அனுபவம் :”ஃபிரெண்ட்ஸ் நடுவில் ஏதாவது பேச்சு வந்தால், ‘ஆமா, இவ பெரிய நயன்தாரா தங்கச்சி’னு கலாய்க்கறதுண்டு. அதேமாதிரி ஆண்களைப் பற்றி சொல்லும்போது, ‘பெரிய அரவிந்த்சாமி நினைப்பா?’னு சொல்வாங்க. நான் இப்போ, ‘ஆமா, நான் நயன்தாரா தங்கச்சிதான்’னு தாராளமாச் சொல்லிக்கலாம். கதைப்படி நயன்தாரா தங்கச்சியாக இருக்கிறதால், எப்பவுமே ரெண்டுப் பேரும் ஒண்ணாதான் இருப்போம்.” என்று கூறினார் ஜாக்குலின்.

ஷூட்டிங் ஸ்பாட் : “நிறைய விஷயம் பேசியிருக்கோம். அந்தப் படத்தைப் பற்றி மட்டுமில்லாமல், என் பர்சனல் லைஃப் பற்றியும் பேசியிருக்கோம். இப்படியெல்லாம் இருக்கலாம் என சில விஷயங்களைச் சொல்வாங்க. நயன்தாரா சொல்லும்போது கேட்காமல் இருக்க முடியுமா? இதுக்கு முன்னாடியே நான் நயன்தாராவின் ரசிகை. செம்ம கேரக்டருங்க!” என்று வருணித்தார்.

நயன் மேடம்: ”ஐய்யோ… நீங்க வேற! அவங்களை நேரில் பார்க்கும் யாருக்கும் அக்கானும் கூப்பிட மனசு வராது. நிஜமா சொல்லணும்னா, அவங்கதான் என் தங்கச்சி மாதிரி இருப்பாங்க. படத்துக்காக மட்டுமே ‘அக்கா’னு கூப்பிடுவேன். மற்ற நேரங்களில் நயன் மேம் னு தான் கூப்பிடுவேன்”