Home Tamil Cinema News என்னை கைப்பிடித்து உயர்த்தியவர் கமல் என்று கூறும் பசங்க ஸ்ரீராம்

என்னை கைப்பிடித்து உயர்த்தியவர் கமல் என்று கூறும் பசங்க ஸ்ரீராம்

110

sriram

பசங்க படத்தில் சிறுவனாக அறிமுகமான ஸ்ரீராம் தற்போது வாலிபனாகி விட்டார். இவர் தற்போது ‘பைசா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக அறிமுகமாவது குறித்த தனது அனுபவம் பற்றி அவர் கூறுகையில்.

‘இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் மஜீத். இவர் இதற்கு முன்பு விஜய் சாரை வைத்து தமிழன் படம் இயக்கினார். அவரது படத்தில் நானும் நடிப்பதில் பெருமை. இது சென்னையில் இருக்கும் குப்பைகள் மற்றும் குப்பைப் பொறுக்குபவன் பற்றிய கதை. இந்தப் படத்துக்காக சென்னையில் பல குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து நடித்தேன்.

படக்குழுவும் குப்பை, தூசு, நாற்றம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பயணம் செய்தனர். ’பைசா’வில் நாயகியாக புதுமுகம் ஆரா நடித்துள்ளார். இதில் நாசர் சார் போன்ற மூத்த அனுபவசாலிகளுடன் நடித்தது மறக்க முடியாதது. இது ஒரு கலர்புல் ‘காக்கா முட்டை’ யாக இருக்கும் என்று கூறலாம். நான் உலகநாயகன் கமல் சாரின் பரம ரசிகன்.

அவருடன் பாபநாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்த எனக்கு நடிக்கிற வாய்ப்பே கிடைத்தது. அவருடன் நடிக்க முதலில் மிரட்சியாக இருந்தது. என் பயத்தைப் போக்க அவர் இயல்பாகப் பேசி சகஜமாக்கினார். அவ்வப்போது உடனிருந்து ஊக்கப் படுத்தியதுடன் குறிப்புகளும் கொடுத்தார்.

பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடுபுழாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பு நடந்த பத்து நாட்களும் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் நான் சேர்மத்துரை என்கிற பாத்திரத்தில் நடித்தேன்.

அவர் என்னை கைப்பிடித்து அழைத்து உயர்த்தி வந்ததாகவே ‘பாபநாசம்‘ அனுபவம் இருந்தது. கமல் சாரின் ரசிகர்கள் என்மீது அன்பு காட்டுகிறார்கள். இதை விட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் என்று கூறினார்.