Home Tamil Cinema News கமல் நடிப்பில் புதிய படத்திற்கான வேலைகள் துவங்கின

கமல் நடிப்பில் புதிய படத்திற்கான வேலைகள் துவங்கின

81

kamal_jpg

சென்னை நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் இன்று தன் புதுப்படத்திற்கான பூஜையை தொடங்கினார். ஏற்கனவே இந்தப் படம் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமென சொல்லப்பட்டது.

அதன் பின் தசாவதாரம் படத்தில் கமல் நடித்த ஒரு கதாப்பாத்திரமான பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் முழுப்படமும் எடுக்கவுள்ளார் என கூறப்பட்டது. தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் பல்ராம் நாயுடு கதாபாத்திரம் தான் கமலின் அடுத்த படம் என உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கமலின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்க நடிகர் பிரம்மாணந்தம் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.