Home Tamil Cinema News ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார் கமலஹாசன்!

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார் கமலஹாசன்!

124

Kamal-Hassan

கமலஹாசன் நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவரது படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தற்போது ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர்கள், தொழில்னுட்ப வல்லுனர்களை வைத்து படங்கள் இயக்குவதில் முனைப்புடன் இருக்கிறார்.

தனது கடும் உழைப்பினால் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மரியாதை அளிக்க உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்தில் அழைத்து பேச வைக்கிறார்கள். கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 6–ந் தேதி இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்படத்துறை பற்றி பேசவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 6–ந் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமலஹாசன் உரையாற்றுகிறார்.

இதுவரை தென் இந்தியர்கள் யாவரும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியதில்லை, தற்போது கமலஹாசனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here