Home Tamil Cinema News நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

64

Actor Kamal Hassan was admitted to hospital

நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பூரண குணமாக இன்னும் சிலவாரம் ஆகலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தான் கமல்ஹாசன் அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம் வீடுதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.