Home Tamil Cinema News ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் கமல்

ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் கமல்

109

kamal-haasan

நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய படம் ‘சபாஷ் நாயுடு’. மலையாள பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். இதன் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது.

அதனால் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஜூன் கடைசியில் தான் அவர்கள் திரும்புகிறார்கள். இந்தியாவில் 20 சதவீத படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலை மாதத்துக்குள் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இப்போது ராஜேஷ் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் புதிய படத்தை கமல் ஹாஸனை வைத்து இயக்குகிறார். இதையும் கமல்தான் தயாரிக்கிறார். அடுத்து இவர் இயக்கும் கமல் படத்தின் வேலைகளை ஆகஸ்டு மாதம் தொடங்குகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here