Home Tamil Cinema News கமல் நடிப்பில் மீண்டும் ஒரு தசாவதாரம்!

கமல் நடிப்பில் மீண்டும் ஒரு தசாவதாரம்!

445

1

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படம் யாராலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. மேலும், கமல் இதில் 10 கதாபாத்திரங்களில் மிரட்டியிருப்பார். இந்நிலையில் நாளை கமல் நடிப்பில் மூன்று படங்களுக்கு பூஜை போடவிருக்கின்றனர்.

இதில் ஒரு நகைச்சுவை படமும் அடங்குமாம், இந்த படத்தில் கமல் தசாவதாரம் படத்தில் கலக்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் இப்படத்தில் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்களும் இதில் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

திரையுலகில் எதிலும் புதுமை படைக்கும் கமல் இந்த முறை ஒரு படத்தின் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு திரைக்கதையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here