Home Tamil Cinema News நவம்பர் 7 ஆம் தேதி கமலின் முக்கியமான நாள்.. அரசியல் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு..!

நவம்பர் 7 ஆம் தேதி கமலின் முக்கியமான நாள்.. அரசியல் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு..!

21

சென்னை: புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

 கமல்ஹாசன் கூறி உள்ளதாவது:

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் தனக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செயல் திட்டங்களை தீட்ட, இனியும் தாமதிக்காமல் கூடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும், பல்வேறு இயக்கங்கள் தம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக அறப்போர் இயக்கத்தை சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், அந்த இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும் அமைப்பு என பாராட்டியுள்ளார். எனவே, தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும்.

பேசிக்கொண்டே இருப்பதைவிட, கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனிப்பது ஒருவிதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு என கூறியுள்ள கமல்ஹாசன், வாருங்கள் நியாயத்தூள் கிளப்புவோம் என தெரிவித்துள்ளார்.