பலமுறை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் கங்கனா!

பலமுறை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் கங்கனா!

74

Kangana Ranaut

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் நடந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். டிசைனர் மானவ் கங்வானி வடிவமைத்த ஆடையை அணிந்து அவர் ரேம்ப் வாக் செய்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கங்கனா,

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச மாட்டேன் என்று தெரிவித்தார். மேலும், தனது திருமணம், முதலீடு, வருமானம் பற்றி செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். எனது முதல் திருமணத்திற்கான உடையை மானவ் தான் வடிவமைக்க வேண்டும் என்று கங்கனா தெரிவித்தார்.

அப்படி என்றால் பல முறை மணப்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஏன் கூடாது என்றார் கங்கனா. ஒரு திருமணம் நடக்கும்போது பல முறை திருமணம் நடக்கும் என நம்புவதாக தெரிவித்தார் கங்கனா. நான் 17 வயதில் இந்த துறைக்கு வந்தேன். எனக்கு பணம் சம்பாதிக்க, செலவு செய்ய பிடிக்கும்.

எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பது எல்லாம் என் சகோதரிக்கு தான் தெரியும். அவர் தான் வரி செலுத்துவது, முதலீடு செய்வது, பண பரிமாற்றம் உள்ளிட்டவற்றை பார்த்து வருகிறார் என்று கங்கனா கூறினார்.

ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப் பிடிக்கும் என்று கூறிய கங்கனாவுக்கு வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டுமாம். ஒன்று, இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளும் திட்டம் இல்லையென்று கூறியுள்ளார்.

https://twitter.com/TheFDCI/status/757170119894245377/photo/1?ref_src=twsrc%5Etfw

NO COMMENTS

LEAVE A REPLY