Home Tamil Cinema News தனது வாயால் கெட்ட பாலிவுட் நடிகை கங்கனா

தனது வாயால் கெட்ட பாலிவுட் நடிகை கங்கனா

140

kangana-ranaut

கங்கனா ரனாவத் பாலிவுட்டில் போராடித் தான் தனக்கு என ஒரு பெயரை எடுத்தார். கங்கனா என்றாலே நடிப்பில் பிச்சு உதறிவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார். இருப்பினும் அவரால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவே முடியாது. எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிவிடுவார்.

நான் கான்கள் உதவியில்லாமல் முன்னுக்கு வந்தவள். எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை என்று கங்கனா தெரிவித்திருந்தார். இவரது இந்தப் பேச்சால் பாலிவுட்டில் உள்ள முக்கியமான மூன்று கான்களான ஷாருக், சல்மான், ஆமீர் கானை பகைத்துக் கொண்டார்.

ரித்திக் ரோஷனை சிறிது காலம்  காதலித்தார். ஆனால் அவரோ கங்கனாவுடனான உறவை தொடர விரும்பவில்லை. இந்த நிலையில் கங்கனா தொடர்ந்து ரித்திக்கை குத்திக் காட்டியே பேட்டி அளித்து அவரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

இனி எப்பொழுதும் என் படங்களில் கங்கனாவை ஹீரோயினாக நடிக்க வைக்கவே கூடாது என்று ரித்திக் ரோஷன் இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார். ரித்திக் நண்பர்களாக இருக்கும் ஹீரோக்களும் இயக்குனர்களிடம் கங்கனா வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

கங்கனா நடிப்பில் சக்கை போடு போட்டாலும் பாலிவுட்டில் பெரும்பாலானோரின் பகையை சம்பாத்தித்து வைத்துள்ளார் கங்கனா. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் பகையாக இருப்பதால் கங்கனாவின் பாலிவுட் பயணம் இனியும் தொடருமா என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது.