Home Tamil Movie Reviews கணிதன் – விமர்சனம்

கணிதன் – விமர்சனம்

521
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

அதர்வாவின் அதிரடி செயல்களில் ஆங்காங்கே அதர்வாவையும் தாண்டி இப்பட இளம் இயக்குனர் TN. சந்தோஷ் தெரிகிறார்.

மொத்தத்தில் கணிதன் - போலிகளுக்கு எதிரானவன்

3.2
இயக்கம்: TN. சந்தோஷ்
ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா
இசை: ட்ரம்ஸ் சிவமணி
தயாரிப்பு: வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு
நடிகர்கள்: அதர்வா, கேத்ரீன் தெரசா, கருணாகரன், கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன்

தயாரிப்பாளர் வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வெற்றி திரைப்படம் தான் ‘கணிதன்’. செய்யாத தப்புக்காக சேதாரம் ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற செய்கூலி தான் படத்தின் கரு!

kanithanReview

எப்படியாவது பிபிசி சேனலில் நிருபராகிவிட வேண்டும் என்று துடிக்கும் டி.வி நிருபர் அதர்வாவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான். அந்த நேரம் பார்த்துதான் அவர் வேலை பார்க்கும் துக்கடா டி.வி ஒன்றின் உரிமையாளர் மகள் கேத்ரீன் தெரசா, அதர்வாவின் வாழ்க்கையில் வருகிறார். பின்பு என்ன காதல் தான்.

நாட்டில் லஞ்சம், ஊழல் மோசடி என பல விசயங்கள் தலை விரித்தாடினாலும் அதை விட மிகவும் கொடியது போலி டிகிரி சர்ட்டிபிகேட்டுகள். எனப்படும் கல்விசான்றிதழ் மோசடிகள் தான். என்பதை தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது கணிதன்.

தூர்தர்சன்-பொதிகை டி.வி.யின் நியூஸ் ரீடரான ஆடுகளம் நரேனின் வாரிசு தான் அதர்வா. முதல் வகுப்பில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்ற இன்ஜினியர் என்றாலும், அதிகம் பிரபலமாகாத தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணிபுரிகிறார்.

அதர்வாவின் லட்சியம், பி.பி.சி நியூஸ் சேனலில் நிருபர் ஆவது அந்த லட்சியத்தின் கூடவே, யதேச்சையான ஒரு சந்திப்பில் எதிர் படும் நாயகிகேத்ரின் தெரசாவின் காதலை பெறுவது. இது தான் அதர்வாவின் லட்சியம், கொள்கை, குறிக்கோள் அனைத்தும்.

Kanithan-Movie-Poster-

இந்நிலையில் பி.பி.சி நியூஸ் சேனல் நேர்முக தேர்வுக்கு சென்று வெற்றியும் பெற்று விடுகின்ற அதர்வாவிற்கு அவர் விரும்பியசேனல் பணியில் சேர போலீஸ் – வெரிபிகேஸன் நடக்கிறது. அப்போது அதர்வாவின் கல்விசான்றிதழ் மூலம், அவர் வெளிநாட்டில் படிப்பதாக வங்கிகளில் பல கோடி கல்வி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவர, அதர்வாவின் சான்றிதழை ரத்துசெய்கிறது நீதிமன்றம்.

இவர் போலி சர்டிபிகேட்டை பயன்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறப்பட்டு ஏப்பம் விட்டதாக சொல்கிறது போலீஸ். அதர்வா மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான இளைஞர்களின் சர்டிபிகேட்டுகள் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களின் உதவியுடன் போலி எடுக்கப்பட்டு இத்தகைய வெளிநாட்டு வங்கிகளில் பல கோடிகள் ஏமாற்றப்படுகிறது, செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார் அதர்வா. பிணையில் வெளியே வரும் அதர்வா, போலிகளை கண்டுபிடித்து தோலுரிப்பது தான் படத்தின் மீதிக்கதை.

kanithan-Capture

இங்கிலீஸ்ங்கறது வெறும் லாங்குவேஜ் மட்டும்தான். அதுவே நாலேட்ஜ் இல்லை என ரஜினி ஸ்டைலில் வாக் இங்கிலீஷ், டாக் இங்கிலீஷ். பேசி பிபிசி இண்டர்வியூவில் பிய்த்து பெடலெடுக்கும் அதர்வா நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார். அதே மாதிரி, பொண்ணுங்க கிட்ட எது வேணா வாங்கிடலாம், ஆனா, போன் நம்பர் வாங்க முடியாது. நீ நான் கேட்காமலேயே உன் நம்பரை கொடுத்தப்பவே. நான் முடிவு பண்ணிட்டேன், நீ தான், என் காதலி என்று. இப்படி காதலி கேத்ரினிடம் உருகுவதிலாகட்டும், ‘எனக்கு உன்னை புடிச்சிருந்தது அதான் பொய் சொன்னேன்.’

எங்க அப்பாவிக்கு பிபிசி ரிப்போர்ட்டர் ஆக ஆசை. அது முடியாது போனதால் அவர் ஆசையை நான் நிறைவேற்றிவைக்க முயற்சிக்கிறேன். என சொல்வதிலாகட்டும். அனைத்திலும், தன் தந்தை நடிகர் முரளியின் சாயல் எந்தபடத்திலும் வராமல், தொடர்ந்து முத்திரை பதித்துக்கொண்டு இருக்கும் அதரவாவிற்கு கணிதன் இன்னொரு மைல்கல்.

kanithan_1453

அதர்வா, கேத்ரின் காதல், ஒப்புக்கு ஒத்தடமாக இருந்தாலும் கேத்ரின் அழகு ஆங்காங்கே தூவப்பட்ட ரோசா இதழ்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆபத்தான இடங்களுக்கு கூடவா இவரையும் சூட்கேஸ் மாதிரி இழுத்துக்கொண்டு போக வேண்டும். கேத்ரீன் காஸ்ட்யூமருக்கு உடைத்தேர்வுகளில் அப்படியொரு அழகும் நேர்த்தியும். அதனால் தான் அவர் இவ்வளவு அழகாக படத்தில் தெரிகிறார்.

வக்கீலாக, அதர்வாவின் நண்பராக படம் முழுக்க வரும் கருணாகரனின் டைமிங் காமெடி கலக்கல். அதே நேரம் அவருக்கு க்ளைமாக்ஸில் ஏற்படும் முடிவு உருக்கம்.

இரக்க சுபாவ போலீஸாக வரும் கே.பாக்யராஜ், பொதிகை நியூஸ் ரீடர் மற்றும் ஹீரோவின் அப்பா ஆடுகளம் நரேன், போலி சாண்றிதழ் குறித்து பக்காவாக விளக்கும் ஒய்ஜி மகேந்திரா, வட இந்திய ஆஜானுபாகு வில்லன் உள்ளிட்டோரில் அந்த வில்லனின் மிரட்டல் நடிப்பு அருமை.

8x449

ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் எல்லா பாடல்களும் கொள்ளையடிக்கிறது. பின்னணி இசை மட்டும் வேறொருவர். அவரும் கொடுத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார். அதே நேரம் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி உள்ளிட்டவை கணிதனின் பெரும் பலம்.

கடை நிலை ஊழியர் முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் வரை. ஏகப்பட்டோர் தனியார் மற்றும் அரசு இயந்திரத்தில் போலி சான்றிதல் முலம் பணியில் இருப்பாதால் அவர்களை யார் என்று அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. என்று அதன் ஆனி வேரை கண்டுபிடித்து வேரறுக்க அதர்வா, இப்படக் கதைப்படி எடுக்கும் முயற்சிகள், அதீத வேகம்.

இது மாதிரி காட்சிகளில் அதர்வாவின் அதிரடி செயல்களில் ஆங்காங்கே அதர்வாவையும் தாண்டி இப்பட இளம் இயக்குனர் TN. சந்தோஷ் தெரிகிறார்.

மொத்தத்தில் கணிதன் – போலிகளுக்கு எதிரானவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here