Home Tamil Cinema News கார்த்தி, சிம்பு படங்கள் ஒரே நாளில் மோதல்!

கார்த்தி, சிம்பு படங்கள் ஒரே நாளில் மோதல்!

143

simbu-karthi

நடிகர்கள் சிம்பு மற்றும் கார்த்தி இருவரும் நல்ல நண்பர்கள், இருப்பினும் இவர்கள் நடிகர் சங்க தேர்தலின் போது எதிரெதிர் அணியில் இருந்தது ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டனர். நடிகர் சங்க தேர்தல் முடிந்து வெகுநாட்கள் ஆகின்றது.

இந்நிலையில் மீண்டும் இவர்கள் மோத ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இந்த முறை அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. சிம்பு நடித்த இது நம்ம ஆளு, கார்த்தி நடித்த தோழா இரண்டு படங்களும் மார்ச் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சிம்பு, கார்த்தி இருவருக்கும் அவர்கள் நடித்து வெளிவந்த முந்தய படங்கள் சரிவர ஓடவில்லை, இதனால் தற்போது வெளிவரவிருக்கும் படங்களின் மீது இவர்கள் அதிக கவனம் செலுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.