Home Tamil Cinema News சந்தானத்துக்கு போஸ்டர் ஒட்டிய கருணாஸ்

சந்தானத்துக்கு போஸ்டர் ஒட்டிய கருணாஸ்

114

 

023

காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். இவரின் பிறந்தநாள் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. சந்தானத்திற்காக மற்ற நடிகர்கள் வாழ்த்து சொல்லும் பொருட்டு சந்தானத்திற்காக பிறந்தனாள் ஆல்பம் ஒன்றையும் அவரது ரசிகர்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள் சந்தானத்தின் ரசிகர்கள் மற்றும் மற்ற நடிகர்களுக்கு ஒருபடி மேலே போய் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சென்னை முழுவதும் போஸ்டர் அடித்துள்ளார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படி போஸ்டர் ஒட்டி தன் நட்பை வெளிப்படுத்திய கருணாஸை பாராட்டி தான் ஆக வேண்டும். இதனால் கருணாசுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் ஊள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here