Home Tamil Movie Reviews கதகளி – விமர்சனம்

கதகளி – விமர்சனம்

373
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். பசங்க மாதிரியான சாப்ட் கதைகளைத் தான் ஹேண்டில் செய்வார் என்கிற ரசிகர்களின் எண்ணத்தை மாற்றும் விதமாக ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் கதகளி - கதகளி இல்லை ருத்ரதாண்டவம்

3.5
இயக்கம்: பாண்டிராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இசை: ஹிப் ஹாப் தமிழா
தயாரிப்பு: விஷால், பாண்டிராஜ்
நடிகர்கள்: விஷால், கேத்ரீன் தெரசா, மைம் கோபி, சூரி, கருணாஸ், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன்

இயக்குநர் பாண்டிராஜ் முதல் முறையாக ஒரு ஆக்‌ஷன் மசாலாவை கையிலெடுத்திருக்கிறார். ஒரு முக்கியமான கொலை வழக்கின் பின்னணியை அறியப் போகும் நேர்மையான போலீஸ் அதிகாரியான விஷால் அதனால் பல சவால்களையும், இன்னல்களையும் சந்திக்கிறார். அதையும் மீறி அதிலிருக்கும் மர்ம முடிச்சுகளை அவர் எப்படி அவிழ்க்கிறார் என்பதே கதை.

Vishal, Catherine Tresa in Kathakali Movie

கடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிரிகள் தான். எல்லோரிடமும் ஏதாவது வம்பு செய்வது என தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டே இருக்கின்றது. அதில் ஓர் கூரிய கத்தி தான் விஷால்.

விஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது. ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடு செல்கிறார். கேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார்.

filmybuzz-gallery-movie-stills-kathakali-movie-stills329060

தம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷால், விஷாலின் அண்ணன் மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் என பலரது மேல் சந்தேகம் எழுகிறது. போலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரசா முதல் தடவையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவருடைய சின்னச் சின்ன குறும்புகளை ரசிக்கும்படி இருக்கிறது.

Kathakali-Movie-Latest-Stills-1

காமெடிக்கு சூரியும், கருணாஸும் இருக்கிறார்கள். நாசர் மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரை இதில் பார்க்க முடிகிறது.

ஹிப் ஹாப் தமிழனின் இசை ஒரு த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையும், அழகே பாடலும் ரசிக்க வைக்கின்றன.

kathakali-movie-14-1

தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். பசங்க மாதிரியான சாப்ட் கதைகளைத் தான் ஹேண்டில் செய்வார் என்கிற ரசிகர்களின் எண்ணத்தை மாற்றும் விதமாக ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் கதகளி – கதகளி இல்லை ருத்ரதாண்டவம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here