Home Tamil Cinema News விரும்பியவர்களை காதலிப்பது தனிப்பட்ட முடிவு என கத்ரீனா கைப் பேச்சு

விரும்பியவர்களை காதலிப்பது தனிப்பட்ட முடிவு என கத்ரீனா கைப் பேச்சு

144

katrinakaif

இந்தி நடிகை கத்ரீனா கைப் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெற்றோர் குழந்தைகள் உறவு பற்றி பேசினார். அதில் அவர் கூறும் போது,

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். அவர்கள் விரும்பும்படி வாழ அனுமதிக்கிறார்கள். பல வியங்களில் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் பிள்ளைகள் ஒவ்வொரு வரும் அதை திறமையாக பயன்படுத்துவது இல்லை.

குழந்தைகளிலும் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தை மிகவும் நன்றாக நேசிக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். காதல் என்று வரும்போது அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது.

காதல் யாராலும் நிச்சயிக்கப்படுவது இல்லை. இருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பெற்றோரால் உறுதி செய்யப்படும் திருமணம் தெளிவாக நிச்சயிக்கப்படுவது என்பதை பிள்ளைகள் அறிய வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர் குழந்தைகள் விருப்பத்துக்கு எதிரானவர்கள் என்று கூறமுடியாது என்று கூறினார்.