Home Tamil Cinema News இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் – கத்ரீனா கைஃப்

இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் – கத்ரீனா கைஃப்

145

Katrina-Kaif

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் ரன்பிர் கபூரும் காதலித்து வந்தனர். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இருவரும் மும்பையில் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ரன்பிருக்கும் அவரது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இது கத்ரீனாவுக்கு பிடிக்கவில்லை.

ரன்பிரும், தீபிகாவும் ஓவர் நெருக்கம் காட்டியது பிடிக்காமல் எதிர்மறையாக பேசி வந்தார் கத்ரீனா. இந்த நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டார்.

கத்ரீனா தற்போது எங்கு சென்றாலும் அவரின் படங்களை பற்றி பேசாமல் அவரது சொந்த வாழ்க்கை பற்றி தான் கேட்கிறார்கள். அவரிடம் கேட்பதோடு மட்டும் அல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மக்கள் கேட்கின்றனர்.

தன் படங்களை விட தனது சொந்த வாழ்க்கை பற்றி மக்கள் பேசுவது பற்றி கத்ரீனா கவலைப்படவில்லை. ரன்பிரை பிரிந்த பிறகு இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரிந்தும் அவர் பல்வேறு இடங்களுக்கு கவலையில்லாமல் சென்று வருகிறார்.

இதுபற்றி கத்ரீனா, படங்களை பற்றி அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பலரும் பலவாறு பேசுவது எனக்கு மட்டும் அல்ல பல பிரபலங்களுக்கு நடக்கிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here