Home Tamil Cinema News கயல் சந்திரனுடன் இணையும் சாதனா டைட்டஸ்

கயல் சந்திரனுடன் இணையும் சாதனா டைட்டஸ்

85

Sadhana-Titus

நடிகர் சந்திரன் ‘கயல்’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆவார். இவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படங்கள் கிரகணம், ரூபாய் மற்றும் ‘நாளைய இயக்குனர்’ புகழ் சுதர்சன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘பிச்சைக்காரன்’ பட புகழ் சாதனா டைட்டஸ் நடிக்கிறார்.

இவர்களுடன் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டானி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தில் சந்திரன் ஒரு ஐ.டி. புரொஃபஷனலாக நடிக்கிறாராம்! முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெறவிருக்கிறது.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற வெள்ளிக் கிழமை துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கு அஷ்வத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் சிஷ்யரும், நடிகர் சந்திரனின் நெருங்கிய நண்பருமான மகேஷ் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here