தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்

86

dfgfdgfd

முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தான் தமிழின் தற்போது நம்பர் ஒன் ஹீரோயின். நான்காவது படத்திலேயே விஜய் ஹீரோயின் ஆகிவிட்டார். தனுஷுடனும் தற்போது கமிட்டாகி உள்ளார்.

தமிழில் தொடக்கத்திலேயே எப்படியோ வெற்றி கிடைத்துவிட்டதால், அடுத்து சில காலங்கள் தெலுங்குப்பக்கம் செல்லலாம் என முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தது போலவே தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யானுக்கு ஜோடி சேர வேண்டும் என்று தற்போது களத்தில் இறங்கியுள்ளாராம்.

அதற்காக விஜய் படத்தில் நடித்துக்கொண்டே தெலுங்கில் நடிப்பதற்காக ஹைதரபாத்தில் தங்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்த முடிவை எடுக்க காரணம் அவரது அம்மா நடிகை தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY