Home Tamil Movie Reviews கோ 2 – விமர்சனம்

கோ 2 – விமர்சனம்

284
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தமிழ் திரையுலகில் நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படங்களின் வரிசையில் கோ படம் வெளிவந்து கடந்த தேர்தலின் போது மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்சியாக இந்த தேர்தலுக்கு கோ 2 வெளிவந்துள்ளது. ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் படம் தான் கோ 2.

2.8
இயக்கம்: சரத்
ஒளிப்பதிவு: பிலிம் ஆர் சுந்தர் வெங்கட்
இசை: லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பு: எல்ரெட் குமார்
நடிகர்கள்: பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பால சரவணன், இளவரசு, ஜான்விஜய், கருணாகரன், மயில்சாமி, நாசர்

தமிழ் திரையுலகில் நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படங்களின் வரிசையில் கோ படம் வெளிவந்து கடந்த தேர்தலின் போது மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்சியாக இந்த தேர்தலுக்கு கோ 2 வெளிவந்துள்ளது. ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் படம் தான் கோ 2.

CiT4xbUU4AAiTV4

கோ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை. ஆனால், டைட்டில் வைத்ததற்காகவே சிறகுகள் கட்சி வீழ்ச்சியடைந்து மீண்டும் பிரகாஷ்ராஜ் முதல்வரானார் என்ற வசனம் வருகின்றது. அறிமுக இயக்குனர் சரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழகத்தின் முதல்வர் பிரகாஷ்ராஜ், ஒரு பத்திரிகையாளர் பாபி சிம்ஹாவால் கடத்தப்படுகிறார். தமிழகமே பதட்டமாக போலிஸ் படையுடன் பாபி இருக்கும் இடத்தை வந்து சேர்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும், எதற்கு முதலமைச்சரை கடத்துனீர்கள் என்று கேட்க, பொதுவாக தீவிரவாதிகளை விடுவிக்கும் கோரிக்கைகளை வைக்காமல், பாபி மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார்.

KO-2

அது அரசாங்கத்திற்கு சாதாரனமாக இருந்தாலும், பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டுவருவதே மீதிக்கதை.

பாரதியார் கவிதை எல்லாம் தெரிந்த புரிந்த அநாதையாக, சமூக அக்கறை கொண்ட நிருபராக, முதல்வரை கடத்தும் துணிச்சல்காரராக பாபி சிம்ஹா அருமை. ஒரு பத்திரிகையாளனாக பாபி சிம்ஹா பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். அவர் வில்லனாக பட படங்களில் மிரட்டினாலும் இதில் நாயகன் வேடம் அவருக்கு பரவாயில்லை.

Ko2-Movie

நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய காரணம் இருக்கு என்பதை முதலமைச்சரிடம் விளக்கும் காட்சியில் க்ளாப்ஸ் தெறித்தாலும், ரொமான்ஸ், டூயட் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தவிர்த்தால் நல்லது.

பாபியால் கடத்தப்பட்ட முதல்வராக பிரகாஷ்ராஜ், ஆரம்பத்தில் குதிப்பதும் பின் பாபி சிம்ஹாவை புரிந்து கொண்டு சாந்தமான தலைவனாகவும் வழக்கம் போலவே நச் சென்று நடித்திருக்கிறார். பிறகு அவரே மொத்த படத்தையும் தாங்கி நிற்பார் என்று எதிர்ப்பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனை பெரிய நடிகரை ஒரு சேரில் உட்கார வைத்து பேச மட்டும் வைத்துவிட்டார்கள்.

நிக்கி கல்ராணி அழகான தரிசனத்துடன் கொஞ்சம் நடித்தும் இருக்கிறார், அவ்வப்போது மைக் பிடித்து பேசுகிறார், பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.

Ko2-Movie

பாபியின் நண்பர் மற்றும் நல்ல அமைச்சரின் வாரிசாக பால சரவணன் நடிப்பு அருமை. போலீஸ் விசாரணையில் தளபதி, காதல் தேசம் படக்காட்சிகளை கலந்து சொல்லி தப்பிக்கும் அவரது சாமர்த்தியம் அருமை. கொலைபாதக அமைச்சராக இளவரசு, முதல்வரை கடத்தியதும் ஆ.. ஊ.. என குதிக்கும் தொண்டர் படை தலைவராக மயில்சாமி, கெஸ்ட் ரோவில்நாசர், கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் கச்சிதம்.

லியோன் ஜேம்ஸின் புது வித இசை, பிலிம் ஆர் சுந்தர் வெங்கட் அவர்களது அழகிய ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு எல்லாம் சரத்தின் இயக்கத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் “கோ 2” – தற்கால அரசியலை விரும்புவோர் சென்று பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here