Home Tamil Sports News டி20 போட்டியில் 54 பந்துகளில் 82 ரன்கள்: விராட் கோலி சாதனை…

டி20 போட்டியில் 54 பந்துகளில் 82 ரன்கள்: விராட் கோலி சாதனை…

29

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 54 பந்துகளில் 82 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் விரட்டலில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விரட்டலில் விராட் கோலி 1016 ரன்களை டி20-யில் எடுத்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மெனும் இந்தச் சாதனையில் இல்லை. தற்போது 1830 ரன்களுடன் கோலி, மெக்கல்லம், திலகரத்னே தில்ஷன் ஆகியோருக்கு அடுத்ததாக 3-ம் இடத்தில் உள்ளார்.

கடைசி 10 வெற்றிகர டி20 சர்வதேச போட்டி விரட்டலில் கோலியின் சராசரி 99.66. இந்த விரட்டல் இன்னிங்ஸ்களில் 598 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி 4 முறையே ஆட்டமிழந்திருக்கிறார். மொத்தமாக டி20 விரட்டலில் கோலியின் சராசரி 84.66, வெற்றிகர விரட்டலில் சராசரி 117.

கடைசி வெற்றிகர டி20 விரட்டலில் கோலியின் ஸ்கோர்கள் வருமாறு: 82, 82* 55*, 41*, 56*, 49, 50, 72* 57*, 54.