Home Tamil Cinema News வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் லட்சுமி மேனன்

வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் லட்சுமி மேனன்

134

0d91792b

லட்சுமிமேனன் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக நடித்து வந்தவர். இவர் திடீரென்று வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக நடித்தார். விரைவில் அவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள ‘மிருதன்’ திரைக்கு வரவுள்ளது.

இவர் தற்போது சிப்பி, ஜெமினி கணேசன் படங்களில் நடிக்கிறார். லட்சுமி மேனனுக்கு சினிமாவில் நடுவில் சற்று சருக்கல் ஏற்பட்டாலும் தற்போது பழைய வேகத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இவர் அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை சிவஞானம் இயக்குகிறார்.

லும் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், சில ஹீரோயின்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கவும் லட்சுமி மேனன் முயல்வதாக கோடம்பாக்கத்தில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது.

லட்சுமிமேனன் கும்கி, சுந்தரபாண்டியன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தவர். கைநிறைய படங்கள் தேடி வந்தபோது படிக்கப்போகிறேன் என்று வாய்ப்புகளை நழுவவிட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது.