Home Tamil Cinema News பள்ளியில் படித்தபோதே லட்சுமிமேனனுக்கு ஜெயம் ரவி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாம்!

பள்ளியில் படித்தபோதே லட்சுமிமேனனுக்கு ஜெயம் ரவி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாம்!

133

miruthan

நடிகை லட்சுமி மேனன் நடித்து திரைக்கு வரவுள்ள படம் மிருதன். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். ஹாலிவுட்டில் மட்டுமே ஜூம்பி கதையம்சம் கொண்ட படங்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறி, தற்போது தமிழில் முதல் ஜூம்பி படமாக உருவாகி இருக்கும் இதை சக்தி சவுதர்ராஜன் இயக்கி உள்ளார்.

இந்த படம் பற்றி லட்சுமிமேனன் கூறும்போது, டிராபிக் கான்ஸ்டபிள் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்க, அவருக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்தேன். அப்போது முதல் ஜெயம் ரவி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது பரவசம் அடைந்தேன். இதில் டாக்டர் வேடம் ஏற்றிருந்தாலும் சில ஆக்‌ஷன் சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு ரவி நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக நடித்ததுபோல் தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்கமாட்டேன். அதில் எனக்கு ஆர்வம் இல்லை. இவ்வாறாக லட்சுமி மேனன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here