Home Tamil Cinema News விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

146

Lakshmi-Menon and Vijay-Sethupathi

நடிகர் விஜய் சேதுபதி சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள காதலும் கடந்து போகும், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் மெல்லிசை, இறைவி, தர்மதுரை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

அத்துடன் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் அவருக்கு படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் விஜய் சேதுபதி அடுத்ததாக வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கு ரெக்கை என பெயர் வைத்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

கணேஷ் தயாரிக்கும் இந்தப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகவுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here