Home Tamil Cinema News தனுஷுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

தனுஷுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

97

dhanush

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து கொடி, தொடரி ஆகிய படங்கள் வரவிருக்கின்றது. இப்படங்களை நடித்து முடித்ததும் அதனை தொடர்ந்து கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இவரே அறிவித்திருந்தார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லட்சுமி மேனன் ஜிகர்தண்டா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.