விஜய் சேதுபதி நடிப்பினை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் சேதுபதி நடிப்பினை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

107

lakshmi-ramakrishnan

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் எப்போதும் மனதில் பட்டதை வெளியே கூறிவிடுவார். இதன் காரணமாகவே பல பிரச்சனைகளில் இவர் மாட்டிக்கொள்வார்.

இந்த நிலையில் சுவாதி கொலை சம்மந்தாமாக பேசுவதற்காக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் லட்சுமி கலந்துக்கொண்டார். இதில் ‘சமீபத்தில் இறைவி என்று ஒரு படம் பார்த்தேன். கடைசி 10 நிமிடம் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இருந்தது.

ஆனால் படம் முழுவதும் வன்முறை, இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர், அவர் இதுப்போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் முன் யோசிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY