Home Tamil Cinema News விஷாலைப் பின்பற்றும் ஸ்ரீதிவ்யா

விஷாலைப் பின்பற்றும் ஸ்ரீதிவ்யா

122

Lakshmi Ramakrishnan

சின்னத்திரை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது ஒரு வசனத்தால் சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவை அனைத்திற்கு காரணம் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்கின்ற வசனம் தான்.

இந்தநிலையில் தற்போது ஒரு திராவிட அரசியல் கட்சி இந்த வசனத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த, ‘இதை நான் நியாயத்திற்காக பயன்ப்டுத்துகிறேன்’ என்று அவர் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளாக கேட்க, அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ‘நான் எப்போது இப்படி பேட்டி கொடுத்தேன், இது வேண்டுமென்றே என்னை பிரச்சனையில் சிக்க வைக்கும் முயற்சி. இதைப்பற்றி நான் இனி பேச விரும்பவில்லை’ என தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.