Home Tamil Cinema News ராஜமௌலி மீது நில மோசடி செய்ததாக போலிஸில் புகார்

ராஜமௌலி மீது நில மோசடி செய்ததாக போலிஸில் புகார்

101

SS_Rajamouli

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை எடுத்து உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர் ஆவார். இருப்பினும் இவரும் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர் இல்லையென தற்போது நிரூபனமாகியுள்ளது.

ராஜமௌலி தனது பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி-2 படத்தை இயக்க ரெடியாகிவிட்டார். இந்நிலையில் இவர் ஒரு அப்பார்ட்மெண்டை பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவருக்கு விற்பதாக இருந்தாராம்.

அந்த தயாரிப்பளர் இதற்காக முன்பணமாக தன்னிடம் ரூ 2.7 லட்சம் ராஜமௌலியிடம் கொடுத்ததாகவும், பிறகு அந்த அந்த அப்பார்ட்மெண்ட் பற்றி அவர் விசாரித்தபோது, அது சட்ட விரோதமாக கட்டப்பட்டதாம், மேலும், அதற்காக அவர் வரி கூட கட்டவில்லை என அவருக்கு தெரிந்திருக்கிறது.

இதனால் அந்த தயாரிப்பாளர் ராஜமௌலி மீது போலீஸில் குற்றம்சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து ஆந்திரா போலிஸார் ராஜமௌலி மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.