Home Tamil Cinema News சந்திரமுகி பார்ட் 2 படத்தில் லாரன்ஸ்–அனுஷ்கா

சந்திரமுகி பார்ட் 2 படத்தில் லாரன்ஸ்–அனுஷ்கா

168

anushka lawrance

பி.வாசு இயக்கத்தில் ரஜினியை நடித்து  ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழில் தற்போது படங்கள் இயக்கவில்லை என்றாலும் பி.வாசு கன்னடத்தில் இயக்கும் படங்கள் வெற்றிப்படங்களாகி வருகின்றன.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய திரிஷ்யம் படத்தை கன்னடத்தில் தயாரித்தார். பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரவிச்சந்திரன், நவ்யாநாயர் நடித்தனர். சிவராஜ்குமார், வேதிகா நடித்த ‘சிவலிங்கா’ கன்னட படத்தையும் இயக்கினார். பி.வாசு இயக்கிய இந்த கன்னட படங்கள் அனைத்தும் பி.வாசுவுக்கு, கன்னட வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

இந்நிலையில் சிவலிங்கா கன்னட படத்தை சந்திரமுகி–2 என்ற பெயரில் தமிழில் பி.வாசு ரீமேக் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இதை பிரமாண்டமாக தயாரித்து இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், அனுஷ்கா ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகுமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here