பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மரணம்

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மரணம்

344

15-146Legendary director AC Thirulogachander AC Thirulogachander Passes Away

அன்பே வா, டாக்டர் சிவா, பாரத விலாஸ், தெய்வமகன் போன்ற படங்களை அவர் இயக்கிய டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 70 படங்களை டைரக்டு செய்தவர், ஏ.சி.திருலோகசந்தர். இவருடைய 2 கால்களிலும் திடீரென்று நோய் தொற்று ஏற்பட்டது. அது உடலில் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அவருடைய உடல் நலம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை.

சிகிச்சைக்காக சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை மோசமானது. உணர்வுகளை இழந்தார். அதை தொடர்ந்து இன்று பிற்பகல் 2.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியிலேயே மரணம் அடைந்தார்.

கடந்த ஜுன் 11ம் தேதி தன்னுடைய 86வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் இன்று ஜுன் 15ம் தேதி மரணமடைந்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. அவருடைய

உடல் சென்னை கானத்தூரில் உள்ள மகன் ராஜ் திருலோகசந்தர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY