கடலுக்குள் இறங்கிவர்களிடம் போலீசார் பேசுவார்த்தை நடத்த அழைப்பு.. மாணவர்கள் வெளியே வர மறுப்பு

கடலுக்குள் இறங்கிவர்களிடம் போலீசார் பேசுவார்த்தை நடத்த அழைப்பு.. மாணவர்கள் வெளியே வர மறுப்பு

19

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி கடந்த 6 நாட்களாக மாணவர்கள், மாணவிகள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும் நிரந்தர சட்டம் தேவை என்று கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலையில் மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்களை கலைந்து போகும்படி போலீசார் அறிவித்தனர். சில இடங்களில் மாணவர்களை அடித்தும் விரட்டினர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து கடலுக்குள் போராட்டக்காரர்கள் சென்றனர்.

இதனையடுத்து, போலீஸ் அதிகாரி சங்கர், ஒலிப்பெருக்கியின் மூலம் “அரசு உங்களுக்கானதை செய்து கொடுத்திருக்கிறது. கடலில் இருந்து வெளியே வாருங்கள் பேசலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுவரை நீங்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வந்தீர்கள். அதுபோன்றே தற்போது பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அறிவித்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இதனிடையே 2 ஹெலிகாப்டர்கள் மெரினா பகுதியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு மேல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY