Home Festivals வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் தைவான்!!

வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் தைவான்!!

19

சீனர்கள் ஷாங் வம்சம் முதலே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டாங் வம்சத்தின்போது இத்திருவிழா மேலும் புகழ் பெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பேரரசி டோவாகர் சிக்சி காலத்தில் சீன நாட்காட்டியின் 8 -வது மாதத்தில் 13 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள்வரை இவ்விழா கொண்டாடப்பட்டது.

இப்பண்டிகையின் போது உயரமான கோபுரங்களில் வண்ண விளக்குகளை ஏற்றுவர். சீனர்களின் பாரம்பரியப்படி விளக்கானது கருவுறுதலின் சின்னமாகும். மேலும் விளக்கு அலங்காரத்திற்காகவும் ஏற்றப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருவிழாவுக்காகவே விளக்கு ஏற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கானது இயற்கைப் பொருட்களால் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டன.

இக்கொண்டாடத்தில் முக்கிய இடம் வகிப்பன சிங்கம் நடனம் மற்றும் டிராகன் நடனம் ஆகும். இடை-இலையுதிர்கால கொண்டாட்டத்தில் கடவுளுக்காக போலி பணங்களை எரித்தல் போன்றது நடைபெறும்.

இதில் பங்கேற்பவர்கள் தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் மனுபோல் அந்த விளக்குகளின் மீது எழுதுகின்றனர். பின்னர் விளக்குகளை எரிய விட்டு அவற்றை வானத்தில் பலூன்களைப் போல் மிதக்க விடுகின்றனர்.