Home Tamil Cinema News 2016 பிப்ரவரியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

2016 பிப்ரவரியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

2743

Tamil-Movies-Releases

2016ம் ஆண்டு வெளியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு தொடக்க்த்தை கொடுத்துள்ளது. தற்போது சனவரி மாத இறுதியில் ‘அரண்மனை 2’, ‘இறுதிச்சுற்று’ படங்கள் ரிலீசாகின்றன.

அடுத்து பிப்ரவரி மாதத்தை தமிழ் சினிமாவில் அதிக படங்களுக்கான மாதமாக குறிப்பிடலாம். காரணம், பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் ரிலீசாகின்றன.

ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, சமந்தா, ராய் லட்சுமி, ஸ்ரீதிவ்யா, பார்வதி நடித்துள்ள மலையாள பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக் ‘பெங்களூர் நாட்கள்’. பிரசாந்த் நடித்த ‘சாஹசம்’, பல விருதுகளைக் குவித்துள்ள வெற்றிமாறனின் ‘விசாரணை’, சித்தார்த் தயாரித்து நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ ஆகிய படங்கள், பிப்ரவரி முதல் வாரம் ரிலீசாகின்றன.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’, ‘மெல்லிசை’, ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’, ஸ்ரீகாந்த் நடித்த ‘சவுகார் பேட்டை’ ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்தில் ரிலீசாகின்றது. விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ அடுத்து
மூன்றாவது வாரம் ரிலீசாகிறது.

அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’, அதர்வா நடித்த ‘கணிதன்’, பேய் படமான ‘ஜீரோ’, மா.கா.பா.ஆனந்த் நடித்த ‘நவசர திலகம்’, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஹீரோவாக நடித்த ‘நையப்புடை’ ஆகிய படங்களும் பிப்ரவரி மாத இருதியில் ரிலீசாக இருக்கின்றன.

பெரிய படங்கள் மட்டுமில்லாமல் வாரத்துக்கு 4 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனால் பிப்ரவரியில் 30 படங்கள் வரை திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here