Home Tamil Breaking News மத்திய அரசு அதிரடி: கேஸ் மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணைய் மானியமும் ரத்து

மத்திய அரசு அதிரடி: கேஸ் மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணைய் மானியமும் ரத்து

21

சமையல் கேஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதை வரும் மார்ச் மாதத்தோடு ரத்து செய்யப் போவதாக அறிவித்து உள்ளது.அதுபோல மாதம் தோறும் சிலிண்டருக்கான விரை 4 ரூபாய்  உயர்த்தவும் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.இது ம
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது.

2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில்  இருந்து குறைந்த பட்சம் 10 முறைக்கு மேல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 32 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இது நடுவர்க்க மக்களை மிகவும் பாதித்து உள்ளது.இந்த நிலையில் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு சாமானிய மக்களை  மிகவும் கஷ்டப் படுத்தும்.மானியம் ரத்தானால் ஏற்படும் விலை உயர்வு காரணமாக மேலும் பல பொருட்களின் விலையும் கண்டிப்பாக உயரும்.இதனால் ஏழை எளிய மக்களின் தினசரி செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். எனவே எளிய மக்களின் நலனை கருதி  சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரத்து முடிவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here