Home Tamil Cinema News வடிவேலு படத்தை ஷங்கருடன் இணைந்து தயாரிக்கும் லைகா

வடிவேலு படத்தை ஷங்கருடன் இணைந்து தயாரிக்கும் லைகா

233

1-VADI

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. சரித்திர பின்னணியில் நகைச்சுவைப் படமாக வெளியானது. இன்றும் இப்படம் ரசித்துப் பார்க்கும் படமாகத் திகழ்கிறது.

தற்போது இயக்குநர் சிம்பு தேவன் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். வடிவேலுவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தைத் தயாரித்த ஷங்கரே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பார் என்று கூறப்பட்டது.

இப்போது ஷங்கருடன் இணைந்து லைகா நிறுவனமும் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. ஏற்கெனவே ரஜினி நடிக்கும் 2.ஓ உள்ளிட்ட 5 படங்களைத் தயாரித்து வருகிறது லைகா என்பது குறிப்பிடத்தக்கது.