Home Tamil Cinema News லைகா உதவியுடன் தெலுங்கில் வெளியாகிறது ‘பிச்சைக்காரன்’

லைகா உதவியுடன் தெலுங்கில் வெளியாகிறது ‘பிச்சைக்காரன்’

127

Satna-Titus0022

சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் திரைக்கதை போன்றவை நன்றாக இருந்ததால் தமிழ் ரசிகர்கள் பிச்சைக்காரன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் வழக்கமான செண்டிமெண்ட்களை உடைத்தெறிந்து இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.

நேற்று இப்படம் மலையாள மொழியில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில்

‘நண்பர்களே லைகா நிறுவனம் என்னுடன் இணைந்து பிச்சைக்காரன் படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடுகிறது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here