Home Tamil Cinema News கானா பாடகராக நடிக்கும் மா.கா.பா.ஆனந்த்

கானா பாடகராக நடிக்கும் மா.கா.பா.ஆனந்த்

153

ma-ka-pa-anandh

மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் விஜயபாஸ்கர் இயக்கியுள்ள படம் “அட்டி”. இதில் ராம்கி, அஸ்மிதா, ராஜேந்திரன், ராம்ஸ், அருள்தாஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, வெங்கடேஷ் அர்ஜுன். இசை, சுந்தர்.சி.பாபு.

இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர் கூறியதாவது “சென்னையில்,காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பிரச்னைகளையும் காமெடியுடன் சொல்லும் படம் தான் அட்டி.

பொழுதுபோக்காக அரட்டையடிக்கும் இடத்தை அட்டி என்பார்கள். அதைதான் படத்தின் பெயராக வைத்துள்ளேன். கானா பாடகராகவும், அஜீத்குமாரின் ரசிகராகவும் மா.கா.பா.ஆனந்த் வருகிறார். ராம்கிக்கு வித்தியாசமான வேடம். படத்தைப் பார்த்த சுந்தர.சி.பாபு, தனது பரிநிதா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார். என்று விஜயபாஸ்கர் கூறினார்.