Home Tamil Cinema News கரு பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மாதவன்

கரு பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மாதவன்

106

madhavan-karupalaniappan

கரு.பழனியப்பன் இயக்கத்தில் மாதவன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்திற்கான கதையை முடித்துவிட்டு தற்போது வசனங்களை எழுதும் பணியில் பழனியப்பன் தீவிரம் காட்டி வருவதாகவும்,

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். வ குவாட்டர் கட்டிங் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம்-வேதா படத்தில் நடிக்கவும் மாதவன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இறுதிச்சுற்று படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதில் இயக்குநர் சுதாவுக்கு, புஷ்கர்-காயத்ரி உதவியதைப் பார்த்தே, ‘விக்ரம்-வேதா’வில் மாதவன் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறுகின்றனர். இதனால் தமிழில் மாதவன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here